ஆணாதிக்கம்,பெண்ணடிமைத்தனம் பற்றி ஊடகங்களில் அறியப்படும் போது நினைத்து கொள்வேன் இப்படியெல்லாம் நடக்குது போல அப்படின்னு.ஆனால் உண்மையில் அவ்வாறு பேசுகிறவர்கள் ரொம்பவும் மிகை படுத்தி சொல்லுகிறார்களோ என்று இப்போது தோன்றுகிது.
ஒரு பெண்ணை எந்த ஆண் அடிமை படுத்த முடியும்? ஒருபெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான ஆண்கள் யார்? யார்?தகப்பன், சகோதரன்,கணவன்,மகன் இந்த நான்கு ஆண்களில்எந்த நிலையில் இருக்கும் ஆண் ஒரு பெண்ணை அடிமைபடுத்துகிறான்.
தகப்பன்
எந்த ஒரு பெண்ணும் என் அப்பா ஒரு ஆண்! அதனால் தன்ஆணாதிக்க புத்தியை என் மீது காட்டி அடக்குகிறார் அல்லது,கொடுமை படுத்து கிறார் என சொல்லுவார்கள் என நினைக்கமுடியவில்லை.எனவே அப்பாவை விட்டுடுவோம்.
சகோதரன்
பெரும்பாலும் பெண்கள் தன் அண்ணன் தம்பிகள் மீது அதிகபாசம் கொண்டவர்கள் தான். இருந்தாலும், சில,பலஇடங்களில் சச்சரவுகள் ஏற்படுகிறது.ஒரு சகோதரன் தன்சகோதரியை கண்டிக்கும் போது இருவருக்கும் சிறு சல சலப்புஏற்படுகிறது. உதரணமாக சகோதரியின் உடை விஷயங்கள்,வெளியே செல்லும் விசயங்களில் சகோதரன் கண்டிக்கும்வாய்ப்பு இருக்கிறது. இங்கே சகோதரிகள் ஒன்றை புரிந்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன். பெண்கள்பேசும் ஒரு வசனம் உண்டு அதாவது ஒரு பெண்ணின் மனதைஇன்னொரு பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும் என்று.எப்படி ஒரு பெண்ணின் மனதை பெண்ணால் தான் புரிந்துகொள்ள முடியுமோ அதேபோல ஒரு ஆணின் புத்தி இன்னொருஆணுக்குதான் தெரியும்.சில வகை உடைகள் அணிந்து செல்லும் போதோ,அல்லதுதனியே வெளியில் செல்லும் போதோ? அந்த சகோதரியின்மீது மற்றவர்கள் பார்வை எப்படி விழும் என்பது அந்தசகோதரனுக்கு நன்றாக புரியும்! அதை அவனால் அவன்சகோதரியிடம் வெளிப்படியாக சொல்லி விளக்கமுடியாது.அதை சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.அந்தநேரத்தில் அந்த சகோதரன் கோபத்தை வெளிப்படுத்தினால்அது அன்பாலும்,அக்கறையாலும் ஏற்படுகிறது என்பதையும்புரிந்து கொள்ள வேண்டும்! அதோடு வீட்டுக்கு தெரியாமல்காதலிக்கும் பெண்களுக்கு சகோதரர்கள் முதல் எதிரியாகதோன்றுகிறார்கள்.ஒரு சகோதரன் தன் சகோதரிக்கு கணவனாக வருகிறவன்,தன்னை விட அறிவிலும் அந்தஸ்திலும், திறமையிலும்,வசதியிலும் உயர்ந்தவனாக இருக்கவேண்டும் என்றுதான்விரும்புகிறான். அதே சமயம் ஒரு சகோதரி தன் சகோதரனுக்குபெண் பார்க்கும் போது வருகின்ற பெண் தன்னிடம் இணக்கமாகஇருக்கவேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருப்பதாகசிலர் சொல்லுகிறார்கள் . (சிலர் சொல்லுகிறார்கள் -எஸ்கேப்பு).
கணவன
ஆணாதிக்கம்,பெண்ணடிமைத்தனம் இந்த பிரச்சினையின்வேர் இங்கே தான் இருக்குமோ என்று நினைக்கதோன்றுகிறது.ஆனால் நன்கு புரிந்து கொண்டு, விட்டுகொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளுபவர்களிடம்எந்த பிரச்சனையும் தோன்றுவதில்லை. மேலும் திருமணமானபுதிதில் இருக்கும் அந்த ஆணாதிக்க பிரச்னை நாளாக நாளாகவீரியம் குறையும் என்பது என் நம்பிக்கை
மகன்
எந்த பெண்ணும் தன் மகனை இவன் ஆணாதிக்க கர்வம் பிடிச்சவன் என்று எப்போதும் சொல்ல போவது இல்லை அதனால் இதை பற்றி ஒன்றும் சொல்ல தேவை இல்லை
பொதுவானவ
தகப்பன்,சகோதரன்,கணவன்,மகன் இவர்களை தவிர வேறுயாரேனும் ஒரு பெண்ணிடம் ஆதிக்கம் செலுத்திவிடமுடியுமா? அப்படி நடந்தால் அதை பார்த்து கொண்டு இவர்கள்சும்மா இருந்து விடுவார்களா? பணிக்கு செல்லும் இடங்களில் பெண்களுக்கு ஆணாதிக்கபிரச்னை இருப்பதாக சொல்ல படுகிறது. இதை வீட்டில்சொல்ல முடியாமல் இருக்கலாம் இந்த பிரச்சனையைபெண்கள் தைரியத்துடனும்,லாவகத்துடனும் எதிர் கொள்ளவேண்டும் . ஒருவன் தான் பதவியில் இருக்கிறோம் என்றஎண்ணத்தில் மற்றவர்களிடம் அதிகாரம் செலுத்தினால் அவன்நிஜத்தில் ஒரு கோழை யாகத்தான் இருப்பான்! மேலும்எங்கள் நாட்டு பெண்கள்கலாச்சாரத்திலும்,கண்ணியத்திலும்,பண்பாட்டிலும்சிறந்தவர்கள் என்ற எண்ணம் இங்கே எல்லோருக்குமேஉண்டு.அதன் பொருட்டு சில நவ நாகரிக நங்கைகளின் உடை ,மற்றும் நடவடிக்கைகளை விமர்சிக்கும்போது அதஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என திரித்து கூறப்படுவதாகதோன்றுகிறது.
நான் என் தாயை தாயாகத்தான் பார்கிறேன் ஒரு பெண்ணாகபார்க்கவில்லை!
நான் என் சகோதரியை சகோதரியாகத்தான் பார்க்கிறேன் ஒருபெண்ணாக பார்க்கவில்லை!
நான் என் மனைவியை மனைவியாகத்தான் பார்க்கிறேன்!ஒருபெண்ணாக பார்க்கவில்லை!
நான் என் மகள்களை மகள்களாக தான் பார்க்கிறேன்!பெண்களாக பார்க்கவில்லை!
